Rock Fort Times
Online News

குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் புகார்: உடனடியாக களமிறங்கிய திருச்சி மேயர்…!.

திருச்சி மாநகராட்சி மண்டலம் எண் – 2 வார்டு எண் 16 மற்றும் 17 வடக்கு தாராநல்லூர் பகுதி, கலைஞர் நகர் மற்றும் சில பகுதிகளில் குடிநீர் கலங்கலாக வருவதாக திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளித்தனர். அந்த புகார்களின் அடிப்படையில் மேயர் அன்பழகன் மாநகராட்சி அலுவலர் மற்றும் பொறியாளர்களுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம், தவறு எங்கு நடந்துள்ளது என்பது குறித்து ஆய்வு செய்துள்ளோம். இனிவரும் காலங்களில் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி நகரப் பொறியாளர் சிவபாதம், செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் சாலை தவ வளவன் மற்றும் உதவி செயற்பொறியாளர், இளநிலை பொறியாளர், மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்