Rock Fort Times
Online News

மே 28 பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் – அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு!

இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் எனப்படும் ஈகை திருநாள் பண்டிகை. இந்த பண்டிகை நாளன்று அதிகாலையிலே எழுந்து, புத்தாடை உடுத்தி சிறப்பு தொழுகைகளில் பங்கேற்று, குர்பானி செலுத்தி, அண்டை அயலகத்தாருடன் உணவுகளை பகிர்ந்து இஸ்லாமியர்கள் உண்டு மகிழ்வர். வசதி படைத்தவர்கள் தங்களால் இயன்றதை ஏழை, எளியவர்களுக்கு தானமாக வழங்குவர். இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் குறித்து தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி முஃப்தி உஸ்மான் முகைதீன் பாகவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மே மாதம் ஞாயிற்றுக்கிழமை 17ம் தேதி மாலை துல் ஹஜ் மாதத்துக்கான பிறை தமிழகத்தில் தென்படாததால் இன்ஷா அல்லா மே மாதம் செவ்வாய்க்கிழமை 19ம் தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று இஸ்லாமிய ஷரியத் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் வருகிற 28ம் தேதி வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்ரீத் பண்டிகையன்று தமிழ்நாடு அரசு சார்பில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்