Rock Fort Times
Online News

அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை- பழிக்கு பழியாக தீர்த்து கட்டிய கும்பல்…!

கடலூர் நவநீதம் நகர் பகுதியை சேர்ந்தவர் பக்தா (எ) பத்மநாதன்(43).  அதிமுக வார்டு செயலாளராக பதவி வகித்து வந்தார்.  இவர், நேற்று இரவு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருப்பனம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் இன்று(28-07-2024) காலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை காரில் பின் தொடர்ந்து வந்த ஒரு கும்பல் அவர் மீது காரை மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த பத்மநாதனை காரில் இருந்து இறங்கிய கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். புதுச்சேரி  பகுதியில் அவர் கொலை செய்யப்பட்டதால் அந்த மாநில போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பத்மநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில்  கடந்த ஆண்டு பாஸ்கர் என்பவர் கொலை வழக்கில் இவரை பழிக்கு
பழியாக கொலை செய்தது தெரியவந்தது.  இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தமிழக அமைச்சரவை மாற்றமா? முதல்வர் மு.க .ஸ்டாலின் பதில்...

1 of 842

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்