மது அருந்திவிட்டு சாலையில் அலங்கோலமாக விழுந்து கிடக்கும் குடிமகன்கள்- பெண்கள் முகம் சுளிப்பு…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர்-1 டோல்கேட் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய சந்திப்பு பகுதியாகும். திருச்சி மாநகருக்கு செல்லவும், லால்குடி, அரியலூர், முசிறி, உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லவும் இணைப்பு பகுதியாக உள்ளது. ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன. இதன் காரணமாக நம்பர்-1 டோல்கேட் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பரபரப்பாக காணப்படும் இப்பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மது பிரியர்கள் மதுவை வாங்கி குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் சாலையில் அங்கும், இங்குமாக அலங்கோலமாக விழுந்து கிடக்கின்றனர். இதனால், பேருந்துக்காக காத்து நிற்கும் பெண்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர். மேலும், ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டு சண்டை போட்டுக் கொள்கிறார்கள். டோல்கேட் பகுதியில் 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடைவீதியில் இருக்கும் மதுக்கடை காரணமாக இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், ஆகவே, 24 மணி நேரமும் மது விற்பவர்கள் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.