Rock Fort Times
Online News

விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம் …

விலைவாசி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் நாளை ( 20.07.2023 )அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அதேபோல, திருச்சி சிந்தாமணியில் மாநகர், புறநகர் தெற்கு, வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இது தொடர்பாக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் ப.குமார், வடக்கு மாவட்டச் செயலாளர் மு.பரஞ்ஜோதி, மாநகர் மாவட்டம் சார்பில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் ஜெ.சீனிவாசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவற்றை கண்டித்து திருச்சி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை காலை 10 மணிக்கு சிந்தாமணி அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க.செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்து பேசுகிறார். இதில், அ.தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்