தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். இந்த தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். அதேபோல திமுக அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சேகர்பாபு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், த.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி , பாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். இந்த தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியே வெற்றிபெறும் என பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில், ஆளும் கட்சிக்கு ஷாக் கொடுக்கும் வகையில் விஜய்யின் தவெக பல தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி தவெக 98 தொகுதிகளிலும், அதிமுக 64 தொகுதிகளில், திமுக 51 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

Comments are closed.