Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை மூட அதிரடி உத்தரவு…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் சட்டவிதிகளுக்கு முரணாக உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த இறால் பண்ணைகளை மூடும்படி மீன்வளத்துறை உதவி இயக்குனர் கடந்த 2018ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யும்படி இறால் பண்ணைகளின் உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன் ஆஜராகி மத்திய அரசின் கடலோர மீன் வளர்ப்பு ஆணைய சட்டத்தின்படி, கடலிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்குள் தான் இறால் பண்ணைகளை அமைக்க வேண்டும். ஆனால் , மனுதாரர்கள் இரண்டு கிலோமீட்டருக்கு அப்பால் இறால் பண்ணைகளை அமைத்துள்ளனர். அதுவும் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் அமைத்துள்ளனர். இந்த பண்ணைகளால் விவசாய நிலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி இறால் பண்ணைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார். மேலும் அவர், தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2,790 இறால் பண்ணைகள் உள்ளன.
அவற்றுள் 2,227 மட்டும் பதிவு செய்யப்பட்டவை. 348 பண்ணைகள் சார்பில் அனுமதிகோரி கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீனையில் உள்ளன. 134 பண்ணைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் , மனுதாரர்கள் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் இறால் பண்ணைகள் நடத்துகின்றனர். எனவே, சட்ட விரோதமாக செயல்படும் அனைத்து இறால் பண்ணைகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம் ஆகிறது. அதனால், தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை உடனடியாக இழுத்து மூட வேண்டும். அந்த பண்ணை உரிமையாளர்கள் மீது கடலோர மீன் வளர்ப்பு பண்ணைகள் சட்டவிதிகளின்படி வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை 6 மாதத்திற்குள் மீன்வளத்துறை அதிகாரிகள் செய்து முடிக்க வேண்டும். இதை செய்ய தவறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும். இந்த வழக்குகளை தள்ளுபடி செய்கிறேன் இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்