குரூப்-4 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர் உட்பட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு வருகிற ஜூன் 9-ம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறும். குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 28-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே அனுப்பப்பட வேண்டும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.