திருச்சியை அடுத்த சிறுகனூர் அருகே உள்ள பொய்கைமணி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 62). சம்பவத்தன்று இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வந்து அங்குள்ள ஒரு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் நின்று கொண்டு இருந்த மர்ம ஆசாமி ஒருவர், தன்னை போலீஸ் என அந்த முதியவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு, நான் பணம் எடுத்து தர உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். இதை நம்பி அந்த முதியவர் தனது ஏடிஎம் கார்டை அந்த மர்ம ஆசாமிடம் கொடுத்ததோடு பின் நம்பரையும் கூறியுள்ளார். அந்த கார்டை பயன்படுத்தி ரூ.5 ஆயிரத்தை எடுத்து அந்த முதியவரிடம் மர்ம ஆசாமி கொடுத்துள்ளார். பின்னர், பாஸ்கரன் வீட்டுக்கு சென்றார். சிறிது நேரத்தில் அவருடைய செல்போனுக்கு ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 700 பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாஸ்கரன் தன்னிடம் உள்ள ஏடிஎம் கார்டை எடுத்து பார்த்துள்ளார். ஆனால், அந்த கார்டு டம்மி கார்டு என்பது தெரிய வந்தது. தனது , கார்டு மூலம் ஏடிஎம்மில் இருந்து இந்தத் தொகையை எடுத்தது தெரிய வந்தது. இதுகுறித்து திருச்சி கோட்டை குற்றப் பிரிவு போலீசில் பாஸ்கரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.