தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி பிரமுகர்கள் கார்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் இன்று (15-04-2024) திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் வேட்பாளர் துரை வைகோ ஒரே காரில் திருச்சி – புதுக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தபோது மொராய் சிட்டி அருகே உள்ள சோதனை சாவடியில் அவருடைய காரை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அமைச்சரின் காரை சோதனை செய்தனர். சோதனை முடிந்த பிறகு காரை செல்ல அனுமதித்தனர்.
1
of 841
Comments are closed, but trackbacks and pingbacks are open.