Rock Fort Times
Online News

பள்ளி சிறுமியை புரட்டி எடுத்த மாடு… பார்ப்போரை பதை பதைக்க வைக்கும் வீடியோ….

இளகிய மனம் கொண்டவா்கள் தயவு செய்து இந்த வீடியோவை பாா்க்க வேண்டாம்...

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தெருக்களில், சாலைகளில் சர்வ சாதாரணமாக மாடுகள் சுற்றித் திரிகின்றன. இரவு நேரங்களில் சாலைகளில் படுத்து கொண்டு போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்துகின்றன. இதனால், வாகன ஓட்டுனர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலையில் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகளும் மாடுகளை பார்த்து அச்சப்படுகின்றனர். இதனை மெய்ப்பிக்கும் வகையில் , சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ.காலனி ஆர்.பிளாக் இளங்கோ தெருவில் நடந்து சென்ற ஒரு பள்ளி சிறுமியை மாடு ஒன்று புரட்டி எடுத்தது. அங்கிருந்தவர்கள் அந்த மாட்டை விரட்டி சிறுமியை மீட்டு  மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போரை பதை, பதைக்க வைக்கிறது. இனிமேலாவது தமிழகம் முழுவதும் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்