தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் லால்குடி சிவன்கோயில் திடலில் திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் வைரமணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் புருஷோத்தமன் வரவேற்புரையாற்றினார். நகர்மன்ற தலைவரும், நகர செயலாளருமான துரைமாணிக்கம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு மாநில வளர்ச்சி கொள்கை குழு துணை தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.