திருச்சி திருவானைக்காவல் பகுதியில் அடிமனை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்- கலெக்டரிடம் பொதுமக்கள் மனு…!
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று (04-03-2024) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலெக்டர் பிரதீப் குமாரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், திருவானைக்காவலில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டு மனைகளின் பத்திரப்பதிவை நிறுத்தி வைத்து, திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோவில் உதவி ஆணையர், சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார். இதன்காரணமாக இப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது அவசர, அவசிய தேவைகளுக்கு தங்களது சொத்துக்களை விற்க முடியவில்லை. ஆகவே, கோவில் உதவி ஆணையர் அனுப்பிய பரிந்துரை கடிதத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை பரிசீலித்த கலெக்டர், ஸ்ரீரங்கம் ஆர்டிஓ தலைமையில், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர், அகிலாண்டேஸ்வரி கோயில் உதவி ஆணையர், அடிமனை குழுவினரிடம் விரைவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். இதேபோல, பொதுமக்கள் பலர் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.