திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூக பணித்துறை சார்பில் முதியோர்களுக்கான உணவுகள், ஊட்டச்சத்துக்கள் குறித்த நிகழ்ச்சி…!
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூக பணித்துறை சார்பில் “முதியோர்களுக்கான உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துகள்” என்ற தலைப்பில் ஹீடு இந்தியா தொண்டு நிறுவனத்தின்கீழ் திருச்சி கிராப்பட்டி யில் செயல்படும் கங்காரு முதியோர் இல்லத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூக பணிதுறை துணை பேராசிரியர் முனைவர். கிப்ட்சன் வழிகாட்டுதலின்படி முதுகலை முதலாம் ஆண்டு மாணவன் ஏ.ஹரிசரண் தலைமையில் நடைபெற்றது.கல்லூரியின் உணவு மற்றும் ஊட்டச்சத்து துறையில் துணை பேராசிரியராக பணிபுரியும் பிரீத்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முதியோர்களுக்கான உணவுகள், உணவு உட்கொள்ளும் முறைகள், அதனை எந்த அளவில் எடுத்துக் கொள்ளவேண்டும், அவர்கள் அன்றாட வாழ்க்கையில் எளிதாக செய்யக்கூடிய உடற்பயிற்சிகள், அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்று எளிதாக புரியும் வண்ணம் முதியோர்களுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் தூக்கமின்மை, உடல் சோர்வு போன்றவற்றை எவ்வாறு உணவுமுறையால் சரி செய்யலாம் என்பதையும் விளக்கி கூறினார். சிறப்பு அழைப்பாளருக்கு ஹீடு இந்தியா தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி.தீபா ராஜா பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதியவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.