திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள நரசிங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன். விவசாயி. இவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த செல்வராஜுக்கும் முன் விரோதம் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று(29-07-2024) சரவணனுக்கும், செல்வராஜுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த செல்வராஜ், குத்துவாளால் சரவணனை சரமாரியாக குத்தினார். இதில் ரத்தம் பீறிட கீழே சரிந்து விழுந்த சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் மற்றும் துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலை செய்துவிட்டு தலை மறைவான செல்வராஜை
வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.