Rock Fort Times
Online News

கிணற்றைக் காணோம் என்ற காமெடி பாணியில் செல்போன் டவரை காணவில்லை என போலீசில் புகார்…!

திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் ஒரு பிரபல நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்கப்பட்டிருந்தது. இந்த டவர் 2022ம் ஆண்டு காலகட்டத்தில் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் மர்ம நபர்கள் அந்த செல்போன் டவரை ஒட்டுமொத்தமாக கழற்றி திருடி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை புரசைவாக்கம் தனியார் நிறுவன மேலாளர் அஜ்மல்கான் திருச்சி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் புகார் செய்தார். அதன் பேரில் தனியார் நிறுவனத்துடன் டவர் அமைக்க ஒப்பந்தம் செய்து கொண்ட வணிக வளாக உரிமையாளர்கள் இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. திருடப்பட்ட செல்போன் டவரின் மதிப்பு ரூ.10 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.வாடகை பிரச்சனையால் டவர் மாயமானதா? என போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு தனது நிலத்தில் உள்ள கிணற்றை காணவில்லை என்று போலீசில் புகார் அளிப்பார்.
அதுபோல இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ஆனால் திரைப்படத்தில் வரும் காட்சி வெறும் சிரிப்புக்காக மட்டுமே. ஆனால் இதில் உண்மையிலேயே செல்போன் டவர் திருட்டுப் போய் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்