பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் இதுவரை பால் கூட்டுறவு சங்கங்களில் கொடுத்து அதற்கான விலையுடன் ஊக்கத்தொகையும் பெற்று வந்தனர். இந்நிலையில் ஊக்கத்தொகையில் ஒரு லிட்டருக்கு 3 ரூபாயை ஆவின் நிர்வாகம் ஏற்று தனியாக வரவு வைப்பதாக கூறப்படுகிறது. இது, விவசாயிகளை ஏமாற்றும் விதமாக உள்ளது. இதன் மூலம் ஊக்கத்தொகையை அரசு குறைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிகிறது. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று(13-01-2025) பால் உற்பத்தியாளர்கள் திருச்சி தெற்கு மாவட்ட தமாகா விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் தலைமையில் மாநில நிர்வாகி வயலூர் ராஜேந்திரன் முன்னிலையில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பாலை கீழே கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் உங்கள் கோரிக்கை தொடர்பாக அதிகாரியிடம் மனு அளிக்குமாறு வலியுறுத்தினர். அதன்பேரில், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க சென்றனர்.
Comments are closed.