ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின் போது ரூ.4000 முதல் ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் வசூல்- ஆர்ப்பாட்டம் நடத்த வந்த பாஜகவினர் கைது…!( வீடியோ இணைப்பு)
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஜனவரி பத்தாம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விழாவினை முன்னிட்டு பகல் பத்து முடிந்து ராபத்து நடந்து வருகிறது. விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின் போது பெரும்பாலான பக்தர்களை அனுமதிக்கவில்லை. மேலும், அதிகாலை 4-15 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பட்டு 5-15 மணிக்கு சொர்க்க வாசலை கடந்து சென்றார். அப்போது பக்தர்களை அனுமதிக்காமல் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர் சேகர் ரெட்டி குடும்பத்தினர் மட்டுமே சென்றனர். இந்து அறநிலையத்துறை சார்பாக வழங்கப்பட்ட விஐபி பாஸ் வாங்கிய பக்தர்களை அனுமதிக்காமல் இரும்பு கேட்டை போட்டு தடுத்து விரட்டி உள்ளன ர். மேலும் சொர்க்கவாசல் திறப்பு அன்று ஒரு டிக்கெட் 4000 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் வரை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அதிகாலை சொர்க்கவாசலை காண வந்த பக்தர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளை கண்டித்து ரங்கா…ரங்கா … கோபுரம் முன்பு திருச்சி பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் ஸ்ரீரங்கம் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed.