தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதி வெளியானது. அதேநாளில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் பிஇ, பி.டெக், பி.ஆர்க் இளநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் தொடங்கியது. இந்த படிப்புகளில் சேர அடுத்த மாதம் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கவுன்சிலிங்குக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 10ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்நிலையில், இன்ஜினியரிங் படிப்புக்கு விண் ணப்பிக்கும் மாணவர்களிடையே தங்கள் கட்-ஆப் மதிப்பெண்களுக்கு தாங்கள் விரும்பும் கல்லூரிகள்,விருப்பமான பாடம் கிடைக்குமா? என்ற குழப்பத்தில் உள்ளனர். இதில் மாணவர்களுக்கு தெளிவை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க் கையின் www.tneaonline.org இணையதளத்தில் 2019- 2023ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு மாணவர் சேர்க்கையின் போது கவுன்சிலிங்கில் எந்தெந்த கட்-ஆப் மதிப்பெண்களுக்கு எந்தெந்த கல்லுாரிகளில் மாண வர்களுக்கு இடம் கிடைத்தது என்று விவரங்கள் வெளி யிடப்பட்டுள்ளன. அதேபோல, கவுன்சிலிங் தரவரிசை பட்டியலுக்கு ஏற்ப கல்லுாரிகளில் மாணவர்கள் பெற்ற குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
Comments are closed.