திருச்சி தில்லை மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்: 1-ம் தேதி நடக்கிறது…!
திருச்சி வயலூர் ரோடு, சீனிவாச நகர் மெயின் ரோடு பகுதியில் தில்லை மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் அமைந்துள்ளது. மக்களுக்கு மகத்தான
சேவையாற்றி வரும் இந்த மருத்துவமனையில் வருகிற 01-09-2024 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. எலும்பு முறிவு, எலும்பு தேய்மானம், முதுகு தண்டுவட வலி, தசை வலி மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இருதயம், சர்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் பொது மருத்துவத்திற்கு சிறந்த மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், எலும்பு அடர்த்தி பரிசோதனை, சர்க்கரை நோய் ரத்த பரிசோதனை, மூன்று மாத சராசரி சர்க்கரை அளவு, ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கண்டறியும் பரிசோதனை, ரத்தத்தில் கொழுப்பு அளவு கண்டறிதல், ரத்தத்தில் யூரிக் அமிலம் கண்டறிதல் போன்ற பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.எம்.ரோஷன் ராஜ் எம்.எஸ்., பொதுநல சிறப்பு மருத்துவர் டாக்டர் பி.ஞானசேகரன் எம்டி, பொது மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் எம்.ராமநாதன் எம்டி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இதில், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.மேலும், விவரம் தேவைப்படுவோர் 95249 52222 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.