Rock Fort Times
Online News

மக்கள் விரும்பவில்லை என்றால் கிராம பஞ்சாயத்துகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படாது- அமைச்சர் கே.என்.நேரு…!

தமிழக கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் திருச்சி மாவட்டத்திற்கு வரப்பெற்றுள்ள 9 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தியை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நிகழ்ச்சி திருச்சியில் இன்று(29-08-2024) நடைபெற்றது. இதில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு கால்நடை மருத்துவ ஊர்தியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், சென்னையில் பருவ மழையை எதிர்கொள்வதற்காக அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தற்போது மீண்டும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை மாநகரத்தை பொறுத்தவரை, 95 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகள் நிறைவடைந்து விட்டன. சென்னை மட்டுமல்லாது, திருச்சி மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சி பகுதியிலும் முழுமையாக கழிவுநீர் வாய்க்கால்களை தூர் வாருவது உள்ளிட்ட பணிகளை விரைவாக செய்து வருகிறோம்.
சென்னையை பொறுத்தவரை, சராசரியாக, 20 முதல், 25 சென்டிமீட்டர் வரை மழை பெய்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதற்கு மேல் மழை பெய்தால் எதிர்கொள்வது சற்று சிரமம் தான். திருச்சி மாநகரப் பகுதி விரிவடையும்போது அருகில் உள்ள கிராமப் பகுதிகள் பாதாள சாக்கடை, மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் பெற முடியாமல் இருந்தன. எனவே, அருகில் உள்ள கிராம பஞ்சாயத்துகளையும் திருச்சி மாநகராட்சி உடன் இணைத்து விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கு மக்கள் விருப்பம் இல்லையென்றால் கிராம பஞ்சாயத்துகள், மாநகராட்சி உடன் இணைக்கப்படாது. இதற்காக அவர்கள் எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்