Rock Fort Times
Online News

திருச்சி, தெப்பக்குளம் நாகநாதர் சுவாமி கோவிலில் பழுதடைந்த நடராஜர் சிலைக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்வதா?- பக்தர்கள் கண்டனம்…!

திருச்சி, தெப்பக்குளம் நந்தி கோவில் தெருவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான நாகநாதசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. சாரமாமுனிவரின் வேண்டுதலுக்காக எழுந்தருளி அருள் பாலிக்கின்ற நாகநாத சுவாமி திருக்கோவிலில் மிகவும் பழமை வாய்ந்த நடராஜர் சிலை உள்ளது. இந்த சிலைக்கு காலம் காலமாக அபிஷேகம், ஆராதனைகள் நடந்து வந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நடராஜர் சிலையில் பின்னம்( கைகளில் உடைப்பு) ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய வேண்டி பக்தகோடிகள், தெருவாசிகள் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்தும் இங்கு கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக செயல் அலுவலராக பொறுப்பில் உள்ள கீதா பின்னம் ஏற்பட்ட நடராஜர் சிலையை சரி செய்யாமலும், பக்தர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமலும் உள்ளார்.
அதோடு பின்னம் ஏற்பட்ட சிலையை வைத்து தொடர்ந்து உற்சவம், அபிஷேகம் அலங்காரம் செய்து வருகிறார்.
இவை ஆகம விதிமுறைகளுக்கு முரண்பாடானது என சிவனடியார்கள் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது, பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே, இந்த விஷயத்தில் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இனிமேலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழி இல்லை என பக்த பிரமுகர்கள் தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்