லால்குடி அருகே வீட்டுக்குள் புகுந்த 9 அடி நீளமுள்ள நல்ல பாம்பு: 2 மணி நேரம் போராடி பிடித்த தீயணைப்பு வீரர்கள்…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த அப்பாதுரை ஊராட்சிக்கு உட்பட்ட அகிலாண்டபுரம் பிஎஸ் நகரில் வசிப்பவர் இமானுவேல். இவரது வீட்டில் சுமார் 9 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்த இமானுவேல் பாம்பை வெளியே விரட்டுவதற்கு போராடினார். இருந்தாலும் பாம்பு வெளியே செல்லாமல் போக்கு காட்டியது. இது குறித்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி அந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். பாம்பு பிடிபட்ட பிறகே இமானுவேல் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
Comments are closed.