பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து மீஞ்சூர் ரயில்வே பிளாட்பாரத்தில் வைக்க முயன்ற தந்தை- மகள் கைது…!
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த நபர் தனது மகளுடன் சென்னை நோக்கி வந்த புறநகர் ரெயிலில் பயணம் செய்தார். அந்த ரெயில் மீஞ்சூர் ரெயில் நிலையத்தை அடைந்தபோது ரெயிலில் இருந்து இறங்கிய தந்தையும், மகளும் தாங்கள் கொண்டு வந்த சூட்கேசை பிளாட்பாரத்தில் வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். இதனை கண்ட போலீசார் சந்தேகமடைந்து இருவரையும் பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த சூட்கேசை சோதனை செய்தபோது, அதில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் இருந்தது கண்டறியப்பட்டது. தனது 17 வயது மகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததால், ஆத்திரத்தில் தனது மகளுடன் சேர்ந்து அந்த பெண்ணை கொலை செய்ததாக அந்த நபர் தெரிவித்துள்ளார். இதையடுத்து தந்தை, மகள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.