திருச்சி சோமரசம்பேட்டை பொம்மாணி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்(வயது 27 ). இவர் வாசன் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வாசன் நகர் 7-வது கிராஸ் ரோடு பகுதியில் பள்ளி வேனை வேகமாக ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், சுந்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு வாசன் நகர் 8-வது கிராஸ் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் வாசன் நகர் நான்காவது கிராஸ் பகுதியில் உள்ள மளிகை கடை முன்பு நின்று கொண்டிருந்த சுந்தரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றார். இதில், காயமடைந்த சுந்தரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.