திருச்சி மாவட்டம் மணப்பாறை முகவனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராகுல் தர்ஷன் (வயது 16). இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்றார். அப்பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் -1 படித்து வந்தார். ஆனால் ராகுல் தர்ஷன் , அப்பகுதியில் உள்ள வேறு ஒரு பள்ளியில் படிக்க விரும்பியதாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அவர் கடந்த சில நாட்களாக நண்பர்கள், பெற்றோர்களிடம் சரியாக பேசாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு போட்டு ராகுல் தர்ஷன் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தந்தை ஆறுமுகம் வையம்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தனக்கு விருப்பம் இல்லாத பள்ளியில் சேர்த்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.