Rock Fort Times
Online News

திருச்சியில் ரயில் பயணிகளிடம் லேப்-டாப் திருடிய த.வெ.க.நிர்வாகி உட்பட 2 பேர் கைது…!

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து ஏராளமான பயணிகள் வெளியிடங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சென்று வருகின்றனர். இதனால், ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் திருச்சிக்கு ரயிலில் வரும் பயணிகளிடம் லேப்-டாப்கள் அடிக்கடி திருட்டுப் போயின. இதுகுறித்து ரயில் நிலைய போலீசாரிடம் பயணிகள் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து லேப்டாப் திருடிய நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் ரயில் பயணிகளிடம் லேப்-டாப்களை திருடிச்சென்ற வழக்கில் ரயில்வே போலீசார், பரணிதரன் மற்றும் அவரது கூட்டாளியான கள்ளிக்குடியைச் சேர்ந்த ரோகன் தேவ் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களில் பரணிதரன் தமிழக வெற்றிக்கழக ஸ்ரீரங்கம் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் என்று கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து பயணிகளிடமிருந்து திருடப்பட்ட 2 லேப்டாப்களை ரயில்வே போலீசார் மீட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்