Rock Fort Times
Online News

‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்த விவகாரம்; 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…!

‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ச.ஜோசப் விஜய்யின் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில், கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. நடிகராக விஜய்-யின் கடைசிப் படமான இந்த படத்தின் மீது விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இந்த படம் திரையரங்கு களுக்கு வருவதற்கு முன்னரே இணையத்தில் கசிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இதுவரை 9 பேரை தமிழக சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் 3 பேர் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முக்கிய குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரசாந்த், செல்வம், பாலகிருஷ்ணன் ஆகியோரை சைபர் கிரைம் காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட மூவரில் ஒருவர் முக்கிய குற்றவாளி எனவும், அவர் மற்றொரு திரைப்படத்தில் ஃப்ரீலான்சர் முறையில் உதவி எடிட்டராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்