Rock Fort Times
Online News

அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் த.வெ.க.வில் இணைந்தார்..!

தமிழ்நாடு முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் மாற்றுக் கட்சியினர் பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். முக்கியமாக அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அதேபோல, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் பலரும் தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் சென்னை, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இன்று( ஜூலை 4) பனையூரில் நடந்த இணைப்பு நிகழ்ச்சியில் திமுக மூத்த தலைவரும், அரக்கோணம் எம்.பியுமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இதேபோல திமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெ.கருணாநிதி, வி.பி.கலைராஜன் ஆகியோர் தவெகவில்  இணைந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் இன்று தவெகவில் இணைந்தார். மேலும், அதிமுகவை சேர்ந்த பல முன்னாள் எம்எல்ஏக்கள் கட்சியில் சேர்ந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்