Rock Fort Times
Online News

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்…!

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், 47 விழாக்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் முதல் நிகழ்வாக திருச்சி கிழக்கு மாநகரம், நகரம், பேரூர் மற்றும் சேர்மன்கள் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில், திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளரும், மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன் உள்ளிட்ட மாநகர, நகர, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்