மணப்புரம் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது. திருச்சி, பாலக்கரை பகுதியிலும் அந்த நிதி நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் அவசர தேவைகளுக்காக பொதுமக்கள் தங்களது நகைகளை அடமானம் வைத்து பணத்தை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் அந்த நிதி நிறுவனத்தின் வரவு- செலவு கணக்குகளை அதிகாரி ஆகாஷ் தணிக்கை செய்தார். அப்போது 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் 3 பேர் 132 கிராம் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.5 லட்சத்து 5 ஆயிரத்து 339 கடனாக பெற்று மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் மனோஜ் மற்றும் தினேஷ் ஆகிய இரண்டு பேரும் மேலாளராக இருந்தபோது நடந்துள்ளது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலி நகைகளை அடமானம் வைத்த பாலக்கரையை சேர்ந்த சரவணன் (37 ), திருச்சி ஈபி ரோட்டை சேர்ந்த ராம்குமார் (33), திருச்சி பாலக்கரை மல்லிகைபுரத்தை சேர்ந்த டேவிட் ஆரோக்கியராஜ் (35) ஆகிய 3 பேரையும் மோசடி வழக்கில் போலீசார் கைது செய்து குற்றவியல் நீதிமன்றம் எண் 5 நீதிபதி பாலாஜி முன்பு ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Comments are closed.