காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நாளை விழா- திமுக மாவட்ட செயலாளர்கள் அழைப்பு…!
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் நாளை ( 15-07-2024) காலை 8 மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் உருவச்சிலைக்கு கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையிலும், க.வைரமணி, காடுவெட்டி ந.தியாகராஜன், மு.அன்பழகன் ஆகியோர் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் பொறுப்பளர்கள் கழக முன்னோடிகள், செயல் வீரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
Comments are closed.