பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பிரபல கூலிப்படை கும்பலின் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், சந்தோஷ், திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ரவுடி திருவேங்கடம் மாதவரத்தில் தப்பியோட முயன்ற போது போலீசார் என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தினர். ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரை தொடர்ந்து சென்னை வடக்கு சூடுதல் காவல் ஆணையர் நரேந்திர நாயர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி திருவேங்கடம் முக்கிய குற்றவாளியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.