Rock Fort Times
Online News

திருச்சியில் இரு தரப்பினர் மோதலில் ஏற்கனவே ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு- பதற்றம், பரபரப்பு…!

திருச்சி திருவானைக்காவல் அருகே கல்லணைச் சாலையில் திருவளர்ச்சோலையில் கடந்த வாரம் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கைகலப்பு, வெட்டுக்குத்தாக மாறியது. இதில், திருவளர்ச்சோலையை சேர்ந்த நெப்போலியன் (வயது 29), கதிரவன் (40), சங்கர் குரு (37), கமலேஷ் (20), ஜீவானந்தம் உள்ளிட்ட 6 பேருக்கு கத்திகுத்து காயம் ஏற்பட்டது.  இதில், நெப்போலியன் அன்றைய தினமே உயிரிழந்தார்.  இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரி நெப்போலியனின் உறவினர்கள், அவரது உடலை வாங்க மறுத்து திருவளர்ச்சோலை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி  இதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டனர்.  பின்னர் இந்த கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷ், அஜய், சரண்ராஜ், மனோஜ் குமார், ஆனந்த்பாபு, ரஞ்சித், முருகானந்தம், பிரபாகரன், வினோத் மற்றும் 17 வயது சிறுவன், 16 வயது சிறுவன் என 11 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த பிரசாத் ,
அப்பு ஆகிய இரண்டு பேரை போலீசார் தேடி வந்தனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்கள் சீர்திருத்தபள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற 11 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில்,  இருதரப்பு மோதலில் படுகாயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கதிரவன் இன்று(14-07-2024) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதுகுறித்து தகவல் அறிந்த கதிரவனின் உறவினர்கள்  திருச்சி அரசு மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கதிரவனின் உறவினர்களிடம் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் அருள், வட்டாட்சியர் தமிழ்செல்வன், மாநகர காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது கதிரவனின் உறவினர்கள் இந்த  கொலை சம்பவத்தில் தொடர்புடைய சுரேஷ்குமார் என்பவரை உடனே கைது செய்ய வேண்டும்.  குற்றவாளிகள் அனைவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும்.  பலியானவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.  இதுதொடர்பாக மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.உயிரிழந்த கதிரவன் தனியார் நிறுவனத்தில் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு அஸ்வதி என்ற மனைவியும், வருண் ,வம்சிகா என 2 குழந்தைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

யார் இந்த தேவதை ! ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்த சிவகார்த்திகேயன்..

1 of 841

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்