Rock Fort Times
Online News

“சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் அவர் கேப்டன்”- விஜயகாந்துக்கு பிரதமர் மோடி புகழாரம்..

திருச்சி விமான நிலைய புதிய முனைய திறப்பு விழா மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (2-1-2024) பங்கேற்று சிறப்புரையாற்றினார். திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்து அவர் பேசுகையில், தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கனமழை காரணமாக கடந்த சில வாரங்கள் மிகவும் சிரமத்தை சந்தித்தீர்கள் என்பதை நான் அறிவேன். மத்திய அரசு உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
பாரத நாட்டின் பிரதிபலிப்பு தான் தமிழ்நாடு. தமிழகத்திற்கு வரும் போது எல்லாம் ஒரு புதிய சக்தியை நான் நிரப்பி செல்கிறேன். திருச்சியில் விமான இணைப்பின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு செல்ல முடியும். தமிழகத்தில் ரயில் இணைப்புகளுக்கு மேலும் வலு சேர்க்க 5 புதிய திட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளது. விஜயகாந்தை நாம் இழந்து உள்ளோம் – சினிமாவில் மட்டும் அல்ல அவர் அரசியலும் கேப்டனாக இருந்து வந்துள்ளார். விஜயகாந்த் மக்களின் இதயத்தை வென்றுள்ளார். தேசிய நலனுக்கு விஜயகாந்த் செயல்பட்டுள்ளார். அவரது குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்