Rock Fort Times
Online News

பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும்… * போக்குவரத்து துறை அமைச்சர் பேட்டி..!

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில், கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய மாநில அளவிலான 67-வது குடியரசு தின தடகளப் போட்டியை, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,

“ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கையை ஏற்று, ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயிப்பதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டுள்ளார். இதன்மூலம் 4 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த பல லட்சம் பேர் பயன்பெறுவார்கள். மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க, அனைத்து பேருந்துகளையும் இணைத்து முன்பதிவு செய்யும் வகையில் அரசின் சார்பில் தனி செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. அரசு உத்தரவை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பதுடன், பேருந்துகளைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். விழாக் காலங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் கூடுதல் பேருந்து நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்