Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது ஏன்?- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி…!

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலையும் கடிதத்துடன் இணைத்துள்ளார். அதில், வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர மறுபரிசீலனையால் தமிழ்நாட்டில் ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும், மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களின் கருத்துக்களைப் புறக்கணித்து, தலைமைத் தேர்தல் ஆணையர் தன்னிச்சையாகவும் அரசியலமைப்புக்கு முரணாகவும் முடிவுகளை எடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.,

அவசர கதியில் எடுக்கப்பட்ட SIR நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். இனிவரும் தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறையையே பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கருத்தைப் பெற வேண்டும். SIR-க்கு பிந்தைய வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்