Rock Fort Times
Online News

கிலோ ரூ.25க்கு ‘பாரத்’ அரிசி: மத்திய அரசு திட்டம்…

‘பாரத்’ பிராண்டின் கீழ் ஒரு கிலோ அரிசியை ரூ.25க்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் முக்கிய உணவான அரிசி விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘பாரத்’ பிராண்டின் கீழ் ஒரு கிலோ அரிசியை ரூ.25க்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (Nafed), தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மற்றும் கேந்திரிய பந்தர் விற்பனை நிலையங்கள் மூலம் இந்த குறைந்த விலை அரிசி விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. பாரத் பிராண்டின் கீழ் மத்திய அரசு ஏற்கனவே கோதுமை மாவு, பருப்பு வகைகளை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்