Rock Fort Times
Online News

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் சிக்கினர்…

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், காந்தி மார்க்கெட் பகுதியில் போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி பகுதியில் போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்த இ.பி.ரோடு பகுதியை சேர்ந்த சச்சின் (வயது 22), வரகனேரியை சேர்ந்த உதயசங்கர் (20 )ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்