Rock Fort Times
Online News

“விக்ரம் லேண்டர்“ நிலவில் வெற்றிகரமாக தரையிறங்க திருச்சி வழக்கறிஞா்கள்  சிறப்பு பிரார்த்தனை …!

பாரதிய ஜனதா தமிழ்நாடு   மாநில தலைவர் அண்ணாமலை அறிவுரையின்படி திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள விநாயகர் கோவிலில் பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர்கள், இந்தியாவின்  சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் இன்று ( 23.08.2023 ) மாலை நிலவில் வெற்றிகரமாக தரையிறங்க வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதில், மூத்த வழக்கறிஞர் தனபால், வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் எஸ்.மாரியப்பன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் முத்து மாணிக்கவேலன், மாவட்ட செயலாளர் சிந்தை சரவணன், அரசு தொடர்புடைய மாவட்ட செயலாளர் ராஜ்குமார், குற்றவியல் வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் சசிகுமார் மற்றும் பலா்  கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்