Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா…!

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட வார்டுகளில் தற்காலிக ஊழியர்களாக பணி புரியும் சுமார் 40 பெண்கள் உட்பட 150 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தரையில் அமர்ந்து தங்களுக்கு ஏற்கனவே மாநகராட்சி தின கூலியாக ரூ.570 வழங்கியதை வேதா நிறுவனம் பொறுப்பு ஏற்ற பிறகு ரூ.430 ஆக மாற்றி விட்டது. எனவே, தங்களுக்கு உரிய தின கூலி வழங்க வேண்டும் என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வேதா நிறுவனத்தின் சார்பில் அதன் அலுவலக மேற்பார்வையாளர் கிஷோர், தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித உடன்பாடும் ஏற்படாததால் ஸ்ரீரங்கம் மண்டல மாநகராட்சி உதவி ஆணையர் வைத்தியநாதன், ஸ்ரீரங்கம் பகுதி தி.மு.க. செயலாளர் ராம்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அமைச்சர் கே.என்.நேரு லால்குடி செல்வதற்காக அந்த வழியாக வந்து கொண்டிருந்தபோது காரை விட்டு கீழே இறங்கி தொழிலாளர்களிடம் உங்களுக்குரிய ஊதியம் கிடைக்கும் என கூறியவுடன் மகிழ்ச்சியடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்