சென்னை குரோம்பேட்டை குறிஞ்சிநகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வசேகர். போட்டோகிராபரான இவர் மனைவியை பிரிந்து மகனுடன் வசித்து வந்தார். இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் ( வயது 19). சி.பி.எஸ்.இ. பிரிவில் பிளஸ்- 2 படித்த ஜெகதீஸ்வரனுக்கு டாக்டராக வேண்டும் என்ற ஆசை அதிகம் இருந்தது. இதற்காக அவர் கடந்த 2 ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்தார். ஆனால், 2 முறை நீட் தேர்வு எழுதியும் அதில் அவர் தேர்ச்சி பெறவில்லை. இதனால், மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஜெகதீஸ்வரன், சில நாட்களாக தனது தந்தையிடம் புலம்பிக்கொண்டு இருந்துள்ளார். அவருக்கு தந்தை ஆறுதல் கூறியும், மிகுந்த மன வேதனையில் இருந்த ஜெகதீஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே மகனை பறிகொடுத்த சோகத்தில் தவித்து வந்த செல்வசேகரும் இன்று ( 14.08. 2023 ) அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் , தேர்வால் தந்தையும், மகனும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.