திருச்சி மாநகர பகுதிக்கு உட்பட்ட சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அதிகாரிகள் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக திருச்சி திருவெறும்பூர் ஆயில் மில் செக் போஸ்ட் பகுதியில் உள்ள குமார் பீடா ஸ்டால் மற்றும் மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் தெரு கதீஜா பெட்டி கடை ஆகிய 2 கடைகளை பூட்டி திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு முன்னிலையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி செல்வராஜ், வசந்தன், ஸ்டாலின் மற்றும் இப்ராஹிம் கொண்ட குழுவினர் ‘சீல்’ வைத்தனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.