கடந்த 03.07.2023ந்தேதி திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில்வே துறைக்கு சொந்தமான பாழடைந்த வீட்டில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டது சபூரா பீவி என்பதும், அந்தப் பெண்ணின் கணவர் சதீஷ்குமார் என்பதும், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்ததும் தெரியவந்தது. விசாரணையின் அடிப்படையில் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் சதீஷ்குமார் பல்வேறு குற்ற செயல்களில் சம்பந்தப்பட்டவர் என்பதாலும், அவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பொன்மலை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என். காமினி ஐபிஎஸ் , சதீஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதனைதொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சதீஷ்குமாாிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான நகல் வழங்கப்பட்டது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.