Rock Fort Times
Online News

தேர்தல் நேரத்தின் போது ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்: சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக நிர்வாகி ஆஜர்…!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. தேர்தல் நேரத்தில் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக ரூ.4 கோடி சிக்கியது. இந்த பணம் நெல்லை நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பா.ஜ.க.வின் தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஆஜராவதாக கேசவ விநாயகம் தெரிவித்திருந்தார்.  அதன்படி, சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம் இன்று(05-06-2024) ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 15-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்