தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் சிலர் கும்பலாகச் சென்று அப்பகுதியில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். இதில், 6 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர்களில் கணேசன் மகன் பிரவீன்(29), தர்மன் மகன் சுரேஷ் (46), சேகர், ஜெகதீசன் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். மேலும், இருவர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், கள்ளச்சாராயம் அருந்தி 4 பேர் உயிரிழந்ததை மறுத்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், “உயிரிழந்தவர்களுக்கு வெவ்வேறு உடல்நல பாதிப்பு இருந்துள்ளது. அதனால் தான் அவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.
Comments are closed.