Rock Fort Times
Online News

திருச்சி துவாக்குடியில் இரும்பு கம்பியால் அடித்து தம்பி படுகொலை – அண்ணன் வெறிச்செயல்…!

திருச்சி துவாக்குடி எம்டி சாலையை சேர்ந்தவர் அர்த்தநாரி. இவருக்கு கோவிந்தராஜ், குமரன் என 2 மகன்கள். கோவிந்தராஜ் (52) துவாக்குடியில் உள்ள தனியார் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். குமரன் (43) துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் டைலராக வேலை பார்த்து வந்தார்.
இவர்கள் இருவருக்கும் திருமணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரும் சமைத்து சாப்பிட்டு ஒன்றாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் இன்று(19-06-2024) ஒன்றாக சமைத்து சாப்பிடும்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ், குமரனை இரும்பு ராடால் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே குமரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கோவிந்தராஜை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்