உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆர்.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் காந்தி மார்க்கெட் பகுதியில் மொத்த விற்பனை செய்யும் பழ மண்டிகளில் திடீர் சோதனை செய்தனர். இந்த சோதனையில் 3 பழ மண்டிகளில் எத்திலீன் ஸ்பிரே மூலமாக பழுக்க வைக்கப்பட்ட
சுமார் 3 ஆயிரம் கிலோ மாம்பழங்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில், கோடை காலத்தில் மாம்பழங்கள், தர்பூசணிகள் மற்றும் வாழைப்பழங்கள் கெமிக்கல் மூலமாக பழுக்க வைத்து விற்பது சட்டத்திற்கு புறம்பானது. இதனை மீறுபவர்கள் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் இதுபோன்ற பழங்களை ரசாயன முறையில் பழுக்க வைப்பது தெரிந்தால் உடனே உணவு பாதுகாப்பு துறைக்கு 96268 39595 என்ற செல்போன் எண்ணில் தகவல் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. தகவல் அளிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று தெரிவித்தார்.
Comments are closed.