Rock Fort Times
Online News

அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜினாமா…!

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதால் கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதன் காரணமாக அதிமுக தற்போது இரண்டு அணிகளாக பிளவு பட்டிருக்கிறது. அவர்களில் சிலர் தவெகவை நோக்கி படையெடுக்கின்றனர். இந்நிலையில், சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகிய 3 பேரும் நேற்று தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி. பிரபாகரை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை அளித்தனர். அவர்களது ராஜினாமா ஏற்கப்பட்டதாக பேரவைத் தலைவர் பிரபாகர் அறிவித்தார். அதோடு அவர்கள் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா இன்று( மே 26) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
விரைவில் அவர் தவெகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இசக்கி சுப்பையா 2011, 2021 தேர்தல்களில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா ஆட்சியில் இவர் அமைச்சராகவும் இருந்திருக்கிறார். இசக்கி சுப்பையாவை தொடர்ந்து மேலும் சில அதிமுக எம்எல்ஏக்களும் தவெக பக்கம் சாயலாம் என்று கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்