திருச்சியை அடுத்த பழூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபால்.இவரது நண்பர்கள் பிரசன்னா,சதீஷ், கார்த்திக். இவர்கள் நான்கு பேரும் கோழி சண்டை போட்டியில் ஆர்வம் உள்ளவர்கள் . சம்பவத்தன்று இவர்கள் அனைவரும் கம்பரசம் பேட்டையில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளனர். அப்பொழுது, பெரியார் நகரை சேர்ந்த ஐயப்பன்,விமல் விக்னேஷ் ஆகிய 3 வாலிபர்கள் இருந்தனர். திருவிழாவிற்கு வந்த. எல்லோரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். பிறகு 7 பேரும் கம்பரசம்பேட்டை, காவிரி படித்துறை அருகில் சென்ற மது அருந்தியுள்ளனர். அப்பொழுது கோபால் மற்றும் ஐயப்பன் கோஷ்டி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் திடீரென்று கோபால் கோஷ்டியினர் கத்தியை எடுத்து ஐயப்பன்,விமல், விக்னேஷ் ஆகியோரின் வயிற்றில் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து ஓடி விட்டனர் .இந்த சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கோபாலும் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு. பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.